திரங்கானுவில் அதிகரிக்கும் பாலியல் வன்புணர்வு! காவல்துறை எச்சரிக்கை!

top-news

ஜூலை 2,


திரங்கானு மாநிலத்தில் பாலியல் வன்புணர்வு வழக்குகள் அதிகரித்து வருவதாகவும் மாநிலக் காவல் துறையினர் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருவதவும் திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairuddin தெரிவித்தார். கடந்த 6 மாதங்களில் 108 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியிருப்பதாக Datuk Mohd Khairi Khairuddin தெரிவித்தார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் சிறப்புக் காவல் படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairuddin தெரிவித்தார்.

5 வயது சிறுமிகள் முதல் 27 வயது இளம் பெண்கள் வரையில் பாலியல் வன்புணர்வுகளால் பாதிக்கப்பட்டிருப்பதை Datuk Mohd Khairi Khairuddin உறுதிப்படுத்தினார். பாலியல் வன்புணர்வு வழக்குகளில் சம்மந்தப்பட்டதாக நம்பப்படும் நபர்கள் 15 வயது முதல் 72 வயதினர் என Datuk Mohd Khairi Khairuddin தெரிவித்தார். கடந்த ஆண்டு 37 வழக்குகளாக இருந்த பாலியல் வன்கொடுமை இந்த ஆண்டு 41 ஆக் அதிகரித்திருப்பதாகவும் தகாத உறவுகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்திருப்பதாகவும் திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairuddin தெரிவித்தார்.


Kes rogol dan gangguan seksual di Terengganu meningkat dengan 108 kes direkodkan dalam enam bulan. Mangsa berusia antara 5 hingga 27 tahun. Polis menubuhkan pasukan khas dan memperketatkan tindakan untuk membanteras jenayah seksual ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *