பாராங்கத்தியுடன் உணவகத்தில் கொள்ளை! BANTING காவல்துறை விசாரணை!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 29,

உணவகத்தில் பாரங்கத்தியுடன் முகமூடி அணிந்த மூவர் கொள்ளையடிக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களைப் பரவியதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாக Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து நேற்றிரவு 7 மணியளவில் 48 வயதான பந்திங்கில் உள்ள உணவக உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் CCTV காணொலிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்.



சந்தேகநபர்கள் மூவரும் முகமூடி அணிந்திருந்தாலும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை ஆடையாளம் கண்டிருப்பதாகவும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு சிலரைக் காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார். இக்கொள்ளையில் நகைகள் ரொக்கப் பணங்கள் என 10,000 ரிங்கிட் மதிப்பில் இழப்பு ஏற்பட்டிருப்பதை 48 வயதான பந்திங்கில் உள்ள உணவக உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த கொள்ளை சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi உறுதிப்படுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *