மலாக்கா துப்பாக்கிச்சூடு வழக்கு: போலீசார் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை - லிம் லிப் எங் கேள்வி

top-news

கோலாலம்பூர், டிச. 18-

மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்த வழக்கில், காவல்துறை இதுவரை எந்த அதிகாரியையும் விசாரணைக்காக கைது செய்யாதது ஏன் என தெளிவுபடுத்த வேண்டும் என கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்வி எழுப்பினார்.

ஒரு வழக்குடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வது குற்றவியல் சட்டப்பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குகளின் விசாரணையில் நிலையான நடைமுறை ஆகும் என தெளிவுபடுத்திய லிம் , நவம்பர் 24 ஆம் தேதி அதிகாலை நடத்தப்பட்ட செயல்பாட்டில் ஈடுபட்ட போலீசார், மூன்று ஆண்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த போதிலும் இதுவரை கைது செய்யப்படாதது ஏன் என கேட்டார்.

ஏஜிசி அலுவலகம் இந்த வழக்கை கொலை வழக்காக மறுவகைப்படுத்த உத்தரவிட்டு இரு நாட்கள் கழிந்துள்ள நிலையில், இந்த கேள்வி எழுந்துள்ளது என்று லிம் லிப் எங் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *