பள்ளி கத்திக்குத்து வழக்கு; மாணவிக்கு மனநல மதிப்பீடு

top-news
FREE WEBSITE AD

பந்திங், ஜூலை 10-

கோலா லாங்காட், பந்திங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாம் படிவ மாணவியை மனநல மதிப்பீட்டிற்காக அனுப்ப மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி Maslinda Selamat இன்று உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞர் Muhammad Amirul Syafiq Yazid முன்வைத்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார்.

15 வயதுடைய அந்த மாணவிக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்டது.

எனினும், குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, அவரிடமிருந்து எந்தவித ஒப்புதல் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

முன்னதாக, அந்த மாணவி காலை 8.33 மணியளவில் போலீஸ் வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சம்பவத்தின் தன்மை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வயதை கருத்தில் கொண்டு, மனநல மதிப்பீடு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

மனநல காப்பகத்தில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் முடிவுகளின் அடிப்படையில், வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *