வகுப்பில் 15 வயது மாணவி கூட்டுப் பாலியல்! 4 மாணவர்கள் கைது!
- Thinagaren Sanggaren
- 16 Oct, 2025
அக்தோபர் 16,
கெடாவில் உள்ள ஒரு பள்ளியில் 15 வயது மாணவியைக் கூட்டுப் பாலியல் செய்த 3 மாணவர்களையும் ஒர முன்னாள் மாணவரையும் காவல்துறை கைது செய்துள்ளதாக பாலிங் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Salimi Mat Ali தெரிவித்தார். 15 வயது மாணவி தொடர்பான ஆபாசக் காணொலி பரவிய நிலையில மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் நேற்றிரவு 9.30 மணிக்கு 15 முதல் 17 வயதுள்ள நால்வரையும் காவல்துறை விசாரித்ததில் அவர்களின் கைப்பேசியில் வகுப்பறையில் மாணவியைக் கூட்டுப் பாலியல் புரியும் காணொலி இருந்ததாகவும் காவல் ஆணையர் Ahmad Salimi Mat Ali தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசியில் பள்ளி வளாகத்தில் கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் ஆபாசக் காணொலிகள் பதிவுச் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் காவல் ஆணையர் Ahmad Salimi Mat Ali தெரிவித்தார். பள்ளி வளாககங்களில் கூட்டுப் பாலியலில் ஈடுபடும்படியானக் காணொலிகளைச் சமூகவலைத்தலங்களில் விற்பனை செய்தும் பாதிக்கப்பட்ட மாணவிகளை மிரட்டியும் உள்ளதால் கைது செய்யப்பட்ட 15 முதல் 17 வயதுள்ள நால்வரை மேலதிக விசாரணைக்காகக் காவல்துறை 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாக காவல் ஆணையர் Ahmad Salimi Mat Ali தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



