பாதுகாப்பில்லாமல் பள்ளியில் நிகழ்ச்சியை நடத்தாதீர்! – கல்வி அமைச்சர் கட்டளை!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 5,

பள்ளி நிகழ்ச்சிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதைப் பள்ளி நிர்வாகம் மேலும் உணர வேண்டும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek நினைவூட்டினார். நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளிகளிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் கல்வி அமைச்சின் சிறப்பு நடவடிக்கைக் குழு பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்புகள் குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் Fadhlina Sidek தெரிவித்தார். நாடு முழுவதும் 7,780 ஆரம்பப் பள்ளிகளும் 2440 இடைநிலைப்பள்ளிகளும் கல்வி அமைச்சின் கீழ் இயங்குகிறது. 

கல்வி அமைச்சின் சிறப்புப் பணிக்குழு அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் கடந்த 2 வாரத்தில் 700 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்த ஆய்வுகளை நடத்தியதாகவும் Fadhlina Sidek தெரிவித்தார். பள்ளியில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதால் மாணவர்களின் பாதுகாப்பிலும் ஆசிரியர்களின் பாதுகாப்பிலும் பள்ளி நிர்வாகம் மேலும் அக்கறையுடன் இருக்க வேண்டும் என Fadhlina Sidek வலியுறுத்தினார். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முறையான பாதுகாப்பை வழங்க முடியாது என்றால் பள்ளி நிர்வாகம் நிகழ்ச்சிகளை நடத்தாதீர்கள் என கல்வி அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *