சுற்றுலா துறையிலுள்ள 10,000 பணியாளர்களுக்கு இலவச பாதுகாப்பு, சுகாதார பயிற்சி
- Tamil Malar (Reporter)
- 12 Jan, 2026
பாங்கி, ஜன. 12-
மனிதவள அமைச்சு, சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சு (MOTAC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன், சுற்றுலா துறையில் பணிபுரியும் 10,000 பேருக்கு இலவச பாதுகாப்பு, சுகாதார அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது 2026 மலேசியா வருகை ஆண்டு (TMM 2026)-ஐ முன்னிட்டு செயல்படுத்தப்படும் முக்கிய முயற்சியாகும்.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் கூறுகையில், (SITI) என்ற பெயரில் இந்தப் பயிற்சி நடைமுறைப்படுத்தப்படும் என்றார். இந்தத் திட்டத்தின் நோக்கம், சுமார் 4.7 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சுற்றுலா துறையிலுள்ள பணியாளர்கள் அனைத்துலக பாதுகாப்பு, சுகாதாரத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதாகும்.
இந்தத் திட்டம் தேசிய தொழில் பாதுகாப்பு, சுகாதார நிறுவனம் (NIOSH) மூலம் செயல்படுத்தப்படுவதுடன், இதற்காக 2.65 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா தொழில் முனைவோர், ஹோட்டல் பணியாளர்கள், ஓட்டுநர்கள், ஒப்பந்ததாரர்கள், சுற்றுலா இயக்குநர்கள், கேட்டரிங் துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



