வருவாய் முறைகேடுகளை எதிர்த்து பிரதமரின் கடுமையான அணுகுமுறை

top-news

செய்தி –வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், நவ. 14-

நாட்டின் வருவாய் முறைகேடுகளை எதிர்த்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் காட்டும் கடுமையான அணுகுமுறை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நாட்டிற்கு பில்லியன் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தும் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடுவோர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்க வழிவகுத்துள்ளது.

ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி, பிரதமரின் இந்த உறுதியான நிலைப்பாடு, ஊழல், கடத்தல், தேசிய வருவாய் முறைகேடுகளில் ஈடுபடும் எந்த தரப்பினரிடமும் எவ்வித சமரசமும் இன்றி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செயல்படுவதற்கு தெளிவான இடத்தை வழங்கியுள்ளதாகக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், பிரதமரின் அங்கீகாரம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. நாட்டின் தலைமையால் காட்டப்படும் கடுமையான அணுகுமுறை, ஊழல், கடத்தல், தேசிய வருவாய் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது எந்தவித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்க தெளிவான வழியை அளிக்கிறது  என்று அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *