உணவுப் பாதுகாப்பில் மலேசியா முன்னுரிமை
- Tamil Malar (Reporter)
- 29 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 29-
அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், போதுமான உணவுப் பொருள் வழங்கலும், மக்களின் வாங்கும் திறன் இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், மலேசியா தற்போதும் நிலையான உணவுப் பாதுகாப்பு நிலையைத் தக்கவைத்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ படில்லா யூசோப் தெரிவித்தார்.
இருப்பினும், தற்போதைய நிலைமை மீது அரசு தளர்வாக நடந்து கொள்ளாது என்றும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள விரிவான, நீண்டகால கொள்கைச் சட்டகத்தை அரசு தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார். உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், விநியோகச் சங்கிலி தடைகள, புவியியல் அரசியல் காரணிகள் ஆகியவை உணவுத் துறையில் அழுத்தத்தை அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, சமீப காலங்களில் லாஜிஸ்டிக் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதுடன், இறக்குமதி செய்யப்படும் விவசாய உள்ளீடுகளின் விலையும் திடீரென உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் மக்காச்சோளம் (ஜாகுங் பிஜியான்) மற்றும் இரசாயன உரங்கள் முக்கியமானவையாகும். இவ்விலை உயர்வுகள், கால்நடை வளர்ப்பு, கோழிப் பண்ணை மற்றும் உணவு உற்பத்தித் துறைகளில் செலவினச் சுமையை அதிகரித்து, இறுதியில் நுகர்வோரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



