சிலாங்கூரில் உள்ள 56 இந்தியச் சமூகத் தலைவர்களுடன் மாநில அரசு சந்திப்பு!
- Thinagaren Sanggaren
- 10 Oct, 2025
அக்தோபர் 10,
சிலாங்கூரில் உள்ள இந்தியர்களின் நலன் தொடர்பான விவகாரங்களுக்காக அமைக்கப்பட்ட KETUA KOMUNITI INDIA தலைவர்களுடன் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு சிறப்புச் சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார். சிலாங்கூரில் உள்ள 56 இந்தியச் சமூகத் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாகவும் செயல்படுத்தப்பட்ட இந்தியர் நலத்திட்டங்கள் குறித்தான கலந்துரையாடலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் பாப்பா ராய்டு தெரிவித்தார்.
இந்திய சமூகத்தின் குரலைக் கேட்டு சிக்கல்களுக்கான தீர்வாக நாம் விரைந்து செயல்படவிருப்பதாக பாப்பா ராய்டு தெரிவித்தார், சிலாங்கூர் மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களில் இந்திய சமூகம் விடுபடாமல் பயனடைய இந்த KKI எனப்படும் 56 இந்தியச் சமூகத் தலைவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் இந்திய சமூகத்தின் ஒவ்வொரு குரலும் செவிமடுக்கபட்டு, உரிய கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதாக பாப்பா ராய்டு நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



