மாமன்னர் முன்னிலையில் புதிய தலைமை நீதிபதிகள் பதவி உறுதிமொழி! – ISTANA NEGARA

top-news
FREE WEBSITE AD

ஜூலை 28,

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் முன்னிலையில் புதிய தலைமை நீதிபதியாக Datuk Wan Ahmad Farid Wan Salleh பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இன்று காலை மாமன்னர் மாளிகையில் நடைபெற்ற புதிய தலைமை நீதிபதிகளுக்கான பதவியேற்பு விழாவில் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim, துணைப்பிரதமர்களான Datuk Seri Ahmad Zahid Hamidi , Datuk Seri Fadillah Yusof, சட்ட நிர்வாகச் சீர்த்திருத்த அமைச்சர் Datuk Seri Azalina Othman Said கலந்து கொண்டனர்.

17 ஆவது புதிய தலைமை நீதிபதியாக Datuk Wan Ahmad Farid Wan Salleh பதவி உறுதிமொழி எடுத்த பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக Datuk Abu Bakar Jais, சபா சரவாக நீதிமன்றத் தலைவராக Datuk Azizah Nawawi ஆகியோரு பதவி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர், அவர்களுடன் 8 புதிய மேல்முறையீட்டி நீதிபதிகளும் 14 உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகளும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *