53,000 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்பிலான சறுக்கு தொட்டியும் 17,000 லிட்டர் டீசலும் பறிமுதல்!
- Muthu Kumar
- 17 Jul, 2025
குவாந்தான், ஜூலை 17-
இந்திரா மஹ்கோத்தா 8இல் உள்ள ஓரிடத்தில், அனுமதியின்றி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும், 53,000 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்பிலான ஒரு சறுக்கு தொட்டியையும் 17,000 லிட்டர் டீசலையும் பகாங் உள்நாட்டு வாணிபம் வாழ்க்கைச் செலவின அமைச்சு, நேற்று கைப்பற்றியது.
அந்நடவடிக்கை தொடர்பில், தமது தரப்பு ஒரு மாத காலமாக மேற்கொண்ட உளவு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஓப்ஸ் திரிஸில் ஆறு அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டதாக பகாங் மாநில கேபிடிஎன் அமலாக்கத் தலைமை அதிகாரி முஹமட் ஹபிஸ் ரம்லி தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு சம்பந்தப்பட்ட டீசலை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவதாக நம்பப்படும் அவ்விடத்தில் பணிபுரிந்த 20 லிருந்து 29 வயதிற்கு உட்பட்ட நான்கு வங்காளதேச, இரண்டு மியன்மார் நாட்டவர்களை தங்கள் தரப்பு கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.33 தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் அனுப்பும் பணியில் இவர்கள் ஓராண்டிற்கும் மேல் ஈடுபட்டு வந்ததாக தகவல் கிடைத்ததையும் முஹமட் ஹபிஸ் சுட்டிக்காட்டினார்.
மேல் நடவடிக்கைக்காக, டீசல் கலன்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய இரண்டு வாகனங்களும் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் இந்நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1974ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகள், விதிமுறை 21(1), 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டு சட்டம், செக்ஷன் 20(1)இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



