சட்டவிரோதமாக மரத் தொழில்சாலை நடத்திய ஆடவர் கைது!

top-news

மார்ச் 30,

எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவினர் நடத்திய சோதனையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மரங்களை வெட்டி விற்பனை செய்து வந்த 52 வயது உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்லை பகுதிகளில் கட்டத்தல் மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கிளாந்தானில் உள்ள கோகாக் கிராய் வனப்பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த தொழில்சாலையைக் கண்டுப்படித்த நிலையில் தொழில்சாலையின் உரிமையாளர் என கருதப்படும் 52 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரவு 10 மணிக்குச் சம்மந்தப்பட்ட தொழில்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 5 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான மரக்கட்டைகளும் தொழில்சாலை இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட கோலா கிராய் வனப்பகுதிகளிலிருந்து மரங்களை வெட்டி, காட்டுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் தொழில்சாலையில் மரக்கட்டைகளாக வெட்டி வெளிநாடுகளுக்குக் கடத்துவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

PGA dan Jabatan Perhutanan Kelantan menyerbu sebuah kilang kayu haram di Kuala Krai, merampas mesin bernilai RM500,000. Seorang lelaki berusia 52 tahun ditahan untuk siasatan. Operasi ini bertujuan membanteras kegiatan pemprosesan kayu secara haram di sempadan negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *