தொழில்சாலையில் தீ! 3000 லிட்டர் டீசல் எரிந்து நாசம்!

top-news

ஜூலை 10,


இன்று அதிகாலை ஈப்போவில் உள்ள ஒரு தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3000க்கும் மேற்பட்ட டீசல் எரிவாயு எரிந்து நாசமானது. இரவு 11.51 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 37 தீயணைப்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarozi Nor Ahmad தெரிவித்தார். சம்மந்தப்பட்ட தொழில்சாலையில் பிரித்தியேகப் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த டீசல் தொட்டியில் தீ ஏற்பட்டதால் தொழில்சாலை முழுவதுமாகத் தீ வேகமாகப் பரவியதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarozi Nor Ahmad தெரிவித்தார்.

சுமார் 3000 லிட்டர் டீசலுடன் 800 லிட்டர் ammonia திரவவும் தீயினால் கருகியதாக பேராக் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarozi Nor Ahmad தெரிவித்தார். சுமார் 5 மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் அதிகாலை 4.19 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட தொழில்சாலை 75% தீயில் கருகியதாகவும் பேராக் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarozi Nor Ahmad தெரிவித்தார். இந்த தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தீ ஏற்பட்டதற்கான காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் பரிசோதித்து வருவதாகவும் பேராக் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarozi Nor Ahmad உறுதியளித்தார்.


Sebuah kilang di Ipoh musnah 75% selepas kebakaran memusnahkan lebih 3,000 liter diesel dan 800 liter ammonia. 37 anggota bomba mengambil masa lima jam memadam api. Tiada kecederaan dilaporkan dan punca kebakaran sedang disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *