சௌஜானா அமெச்சூர் சாம்பியன்ஷிப் போட்டியில் கிம் மின்சு வெற்றி
- Tamil Malar (Reporter)
- 28 Nov, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
ஷா ஆலம், நவ. 28-
சௌஜானா கோல்ப் அன்ட் கன்ட்ரி கிளப்பின் பாம் கோர்ஸில் நடைபெற்ற சௌஜானா அமெச்சூர் சாம்பியன்ஷிப் இறுதி நாளை கனமழை பெரிதும் பாதித்தது. இறுதி ஒன்பது ஓட்டைகளின் போது தொடர்ந்து பெய்த மழையால் போட்டி பலமுறை நிறுத்தப்பட்டு, இடைவெளியில் விளையாடி நிறைவு செய்யப்பட்டது.
முதல் இரு சுற்றுகளுக்குப் பின் மூன்று வீரர்கள் சம அளவு 139 (−5) என்ற ஸ்கோருடன் முதலிடத்தில் இருந்தனர். இறுதி நாள் முதல் ஒன்பது ஓட்டைகளின் போது வானிலை சிறப்பாக இருந்ததால் விளையாட்டு சுமூகமாக நடந்தது.
தென் கொரிய வீரர் கிம் மின்சு முதல் ஒன்பதில் அபாரமாக 2-அண்டர் 34 அடித்து தனியாக முன்னிலை பிடித்தார். அவர் ஆஸ்திரேலிய வீரர் ஜோசையா எட்வர்ட்சை ஒரு ஷாட்டும், சக கொரிய வீரர் அன் ஹேசியானை இரண்டு ஷாட்டுகளும் பின்னுக்குத் தள்ளினார். இப்போட்டியில் கிம் மின்சு கிண்ணத்தை வென்று அசத்தினார்.
பின்புற ஒன்பது ஓட்டைகளைத் தொடங்கியதும் கிழக்குத் திசையிலிருந்து கருமேகங்கள் விரைவாக வந்தன. 13-ஆவது ஓட்டையில் விளையாடிக் கொண்டிருந்தபோதே ஆபத்து சைரன் ஒலிக்கப்பட்டு விளையாட்டு நிறுத்தப்பட்டது.
மழை இடைவெளிகளுக்கு இடையே திறமையான நிர்வாகத்தால் போட்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



