கைரி ஜமாலுடின் உட்பட முன்னாள் தலைவர்கள்: மீண்டும் இணைவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் இல்லை –அம்னோ
- Tamil Malar (Reporter)
- 27 Jan, 2026
மலாக்கா, ஜன. 27-
முன்னாள் தலைவர்கள் உட்பட கைரி ஜமாலுடின் அம்னோவில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக வரும் ஊகங்களுக்கு மத்தியில், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விண்ணப்பமும் பெறப்படவில்லை என்று அம்னோ தெரிவித்துள்ளது.
அம்னோ துணைத் தலைவரும் ‘ரூமா பங்சா’ (Rumah Bangsa) ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ முகமது காலிட் நோர்டின் , 2025 ஆம் ஆண்டு அம்னோ பொதுக்கூட்டம் (PAU 2025) நிறைவடைந்ததிலிருந்து, எந்த நபரும் கட்சியில் மீண்டும் சேர அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கவில்லை என அவர் விளக்கினார்.
மலாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்னோ எப்போதும் திறந்த மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும், கட்சியின் அரசியலமைப்பு, விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே எந்தவொரு விண்ணப்பமும் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தனிப்பட்ட பெயர்களை குறிப்பிட்டு கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



