KL TOWER பூமிப்புத்ராக்களுடையது! இஸ்லாம் அல்லாதவர்களுக்குக் குத்தகைகளா? பெரிக்காத்தான் MP கேள்வி!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 29,

நாட்டின் நான்காவது உயரமான கட்டிடமாக இருக்கும் KL TOWER-இன் குத்தகை உரிமம் பூமிப்புத்ரா அல்லாதவருக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு எதிராகப் பெரிக்காத்தானின் கெரிக் நாடாளுமன்ற உறுப்பினர்  Fathul Huzir Ayob கேள்வி எழுப்பினார். இது பூமிப்புத்ராக்களான மலாய்க்காரர்களின் உரிமத்தை மீறியிருப்பதாகவும்  Fathul Huzir Ayob தெரிவித்தார். 1995 முதல் KL TOWER தொடர்பான பராமரிப்பு உரிமம் Datuk Abdul Hamid Shaikh Abdul Razak எனும் மலாய்க்காரரின்  Hydroshoppe நிறுவனத்திடம் இருந்ததாகவும் கடந்த ஏப்ரல் இந்த பராமரிப்புக் குத்தகை LSH Service Master Sdn Bhd எனும் மலாய்க்காரர் அல்லாதவரின் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டிருப்பதையும் பெரிக்காத்தானின் கெரிக் நாடாளுமன்ற உறுப்பினர்  Fathul Huzir Ayob சுட்டிக்காட்டினார்.

LSH Service Master Sdn Bhd எனும் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மலாய்க்காரர் என்றாலும் அந்நிறுவனத்தின் 70% உரிமம் Tan Sri Lim Keng Cheng எனும் மலாய்க்காரர் அல்லாதவரிடம் இருப்பதையும்  Fathul Huzir Ayob சுட்டிக்காட்டினார். நாட்டின் தலைநகரில் அமைந்திருக்கும் வரலாற்றுப்பூர்வமான KL TOWER இப்போது நாட்டின் அதிகாரப்பூர்வக் குடிமக்களான மலாய்க்காரர்களிடம் இல்லை என்பது மலாய்க்காரர்களுக்கு மிக பெரிய பொருளாதாரப் பின்னடைவு என பெரிக்காத்தானின் கெரிக் நாடாளுமன்ற உறுப்பினர்  Fathul Huzir Ayob தெரிவித்தார்.

1996 ஜூலை 23 அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்ட KL TOWER தொடர்பான உரிமம் அரசாங்கத்திடமும் அதன் பராமரிப்புக் குத்தகைகள் HAK BUMIPUTERA எனும் பூமிப்புத்ராக்களின் சிறப்புச் சலுகைகளுக்குள் இருக்க வேண்டுமென அப்போதைய பிரதமர் துன் மகாதீர் சட்டப்பூர்வமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *