10 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் கால்வாயில் கவிழ்ந்தது! – கிள்ளான்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 20,

10 வயது சிறுவன் தனது தம்பி மற்றும் உறவுக்கார சிறுவனுடன் வாகனத்தைச் செலுத்தி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானான். காலை 10 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த Proton Saga கிள்ளான் Jalan Telok Gong சாலையின் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் வாகனத்திலிருந்து 10 வயதுக்குற்பட்ட மூன்று சிறுவர்களைப் பொதுமக்கள் மீட்டனர். சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Ramli Kasa தெரிவித்தார்.

காலை 9 மணியளவில் 3 சிறுவர்களுடன் போர்ட் கிள்ளான் நோக்கிச் செல்லும் போது கழிப்பறைக்குச் செல்வதற்காக வாகனத்தைச் சாலை ஓரமாக நிறுத்தி வைத்ததாகவும் வெளியே வந்து பார்த்த போது தனது வாகனத்தைக் காணவில்லை என்றும் சிறுவனின் தாயார் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Ramli Kasa தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கால்வாயில் கவிழ்ந்ததில் 10 வயதுள்ள இரு சிறுவர்களும் 7 வயதுள்ள மற்றொரு சிறுவரும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் மேலதிக விசாரணைக்காகப் பெற்றோரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Ramli Kasa தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *