கிள்ளானில் சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுப்பட்ட 210 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!
- Thinagaren Sanggaren
- 09 Nov, 2025
நவம்பர் 9,
கிள்ளானில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதற்காக 210 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையினர் நேற்று நள்ளிரவு கிள்ளானிலிருந்து BANTNG செல்லும் சாலையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மோட்டார் சைக்கிளோட்டிக் கும்பலைத் தடுத்து நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது. மோட்டார் சைக்கிளோட்டிகளில் ஐவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 105 சம்மன்கள் வழங்கப்பட்டதுடன் 210 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 18 வயதுக்குற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகளின் பெற்றோர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து மோட்டார் சைக்கிள்களை மீண்டும் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபரதாத் தொகையைச் செலுத்தாத மோட்டார் சைக்கிள்கள் சிலாங்கூர் கிடங்கில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்திய ஐவர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



