அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தி காவல் அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 20, 

சாலையில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தியது மட்டுமின்றி மற்ற வாகனங்களை மோதியும் பாதுகாப்பு காவல் அதிகாரியைத் தாக்கியதாக நம்பப்படும் HILUX வாகனமோட்டியைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதாக வட கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S. Vijaya Rao தெரிவித்தார். இது தொடர்பான காணொலி சமூக வலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட ஆடவரைச் சம்பவ இடத்திலேயே கைது செய்ததாகவும் S. Vijaya Rao தெரிவித்தார். கிள்ளானிலிருந்து போர்ட் கிள்ளான் செல்லும் சாலையில் மாலை 6.15 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

சாலை நெரிசலின் போது பொறுமையில்லாத HILUX வாகனமோட்டி அருகில் சென்றுக் கொண்டிருந்த Perodua Myvi ரக வாகனத்தை மோதியதாகவும், கீழே இறங்கி வந்து 55 வயது Perodua Myvi வாகனமோட்டியைத் தாக்கியதாகவும் Perodua Myvi வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்ததாகவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த காவல் அதிகாரி தாக்குதலைக் கட்டுப்படுவதற்காக அவ்வாடவரைக் கட்டுப்படுத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வட கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S. Vijaya Rao தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *