கிள்ளானில் ஆயுதங்களுடன் சுற்றிய மூவர் கைது!
- Thinagaren Sanggaren
- 21 Sep, 2025
செப்டம்பர் 21,
கிள்ளான் தாமான் செந்தோசா சாலையில் ஆயுதமேந்திய கும்பலைக் காவல்துறையினர் கைது செய்தனர். கிள்ளான் சாலையில் வழக்கமான சோதனையில் இருந்த காவல் அதிகாரிகளை மீறி சென்றதற்காக வாகனத்தைத் துரத்தி மடக்கியதாகவும், அவர்களின் வாகனத்தைச் சோதனையிட்டதில் பாராங்கத்திகளும் கையுறைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் RAMLI BIN KASA தெரிவித்தார்.
கருப்பு
புரோட்டான் வாஜா வாகனத்திலிருந்த மூவரையும் காவல் துறை கைது செய்திருப்பதாகவும் மூவரும்
31 முதல் 43 வயதுள்ள உள்ளூர்வாசிகள் என்றும் 11 போதைப்பொருள் குற்ற வழக்குகளுடன்
23 சட்டவிரோதக் குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில்
தெரிய வந்துள்ளதாக தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் RAMLI BIN KASA தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூவரும் 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணையை மேற்கொள்ளும்படி
கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



