KLCC கோபுரத்தில் தீ! 30% கருகிய சொகுசு உணவகம்
- Thinagaren Sanggaren
- 01 Nov, 2025
நவம்பர் 1,
KLCC கோபுரத்தின் மூன்றாவது கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நாட்டின் உயரமானக் கோபுரங்களில் ஒன்றான KLCC TOWER 3 இன் ஏற்பட்ட தீயின் புகைப்படங்கள் சமூகவலைத்தலங்களில் பரவியது. இன்று காலை 6.41 மணிக்குத் தீ விபத்து குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் KLCC TOWER மூன்றுக்கு 35 தீயணைப்பு அதிகாரிகளுடன் விரைந்ததாகச் செந்தூல் மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் HAFIZAN HASSAN தெரிவித்தார்.
கோபுரத்தின் 57ஆவது மாடியிலுள்ள சொகுசு உணவகம் 30% தீயில் கருகியதாகவும் 10 நிமிடங்களில் தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் காலை 8.45 மணிக்குத் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் செந்தூல் மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் HAFIZAN HASSAN தெரிவித்தார். இந்த தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தீயில் பாதிக்கப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும் தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் செந்தூல் மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் HAFIZAN HASSAN தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



