சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 141 வெளிநாட்டினர் கைது! – KLIA 2
- Thinagaren Sanggaren
- 16 Jul, 2025
ஜூலை 16,
முறையான ஆவணங்களின்றி KLIA 2 விமான நிலையத்திலிருந்த 141 வெளிநாட்டினர்களைத் தேசிய எல்லை கட்டுப்பாடு பாதுகாப்பு ஆணையமான AKPS கைது செய்துள்ளது. விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 141 வெளிநாட்டினர்கள் நடவடிக்கை சந்தேகத்திற்குரியதாக இருந்ததாக CCTV மூலம் கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சோதனையில் அவர்கள் மலேசியாவில் தரையிறங்குவதற்கான எந்தவோர் அனுமதியும் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 141 வெளிநாட்டினர்களில் 94 பேர் இந்தியாவைச்
சேர்ந்தவர்கள் என்றும், 41 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், மூவர் பாக்கிஸ்தானைச்
சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் வேறொரு நாட்டிலிருந்து
மற்றொரு நாட்டுக்குப் பயணிக்கும் நிலையில் மலேசியாவில் தரையிறங்கி காத்திருந்ததாகவும்
காத்திருப்புக்கான JOINT FLIGHT டிக்கெட் இல்லாமல் அவர்கள் காத்திருக்க
வேண்டிய அவசியமில்லாத நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக
தேசிய எல்லை கட்டுப்பாடு
பாதுகாப்பு ஆணையமான AKPS தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



