ஆள்மாறாட்டம் செய்த 13 வெளிநாட்டினர் கைது! – KLIA விமான நிலையம்!
- Thinagaren Sanggaren
- 31 Jul, 2025
ஜூலை 31,
விமான நிலையத்தில் ஆள்மாறாட்டம் செய்ததாக 13 வெளிநாட்டினர்களை எல்லை பாதுகாப்பு ஆணையமான AKPS அதிகாரிகள் கைது செய்துள்ளனர், நேற்று KLIA 2 விமான நிலையத்துற்குள் அதிக நேரம் சுற்றிக் கொண்டிருந்தவர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் AKPS அதிகாரிகள் சோதனையிட்ட போது முறையான கடப்பிதழ் ஆவணங்களில்லாமல் போலியான அடையாளங்களுடன் இருந்த 13 வெளிநாட்டினர்களை AKPS அதிகாரிகள் கைது செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 270 பேரிடம் இச்சோதனையை மேற்கொண்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பெண் உட்பட 9 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் நால்வர் பக்கிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 13 பேரும் ஆவணங்களை மாற்றியமைத்து போலியான கடப்பிதழ்கள் மூலம் நாட்டுக்குள் நுழைய முயற்சித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. KLIA விமான நிலையத்தில் பயணிகளைக் கண்காணிக்க விவேக CCTVயின் மூலமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிக நேரம் விமான நிலையத்திலிருக்கும் மலேசியர் அல்லாதவர்களை விவேக CCTVயின் மூலமாக அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் எல்லை பாதுகாப்பு ஆணையமான AKPS ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



