கோலாலம்பூர் கோபுர வாசலில் தமிழ் எழுத்து! – துணை அமைச்சர் நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 30,

மலேசியாவின் அடையாளமாக இருக்கும் KL Tower எனும் கோலாலம்பூர் கோபுரத்தின் வாசலில் உள்ள வரவேற்புப் பதாகையில் தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டிருந்தது சர்ச்சையாகிய நிலையில் இன்று காலை தகவல் தொடர்புத் துறை அமைச்சின் துணை அமைச்சர் Teo Nie Ching தமிழ் மொழியுடன் உள்ள பதாகயை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். மேலும் விடுப்பட்டிருந்த மற்ற மொழிகளையும் இதனுடன் இணைக்கப்பட்டு தற்போது மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் 24 மொழிகளும் பதாகையில் இணைக்கப்பட்டிருப்பதாக Teo Nie Ching தெரிவித்தார். 

இது தொடர்பான சர்ச்சை கிளம்பியது கோலாலம்பூர் கோபுரத்தின் நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மாற்று பலகையை முக்கியமாகத் தமிழ் எழுத்துகள் கொண்ட பதாகையை வாசலில் இடம்பெற வேண்டும் என துணை அமைச்சர் Teo Nie Ching கேட்டுக் கொண்டதாகவும் அதன் அடிப்படையில் கோலாலம்பூர் கோபுர நிர்வாகம் தவற்றைத் திருத்திக் கொண்டிருப்பதாகவும் மீண்டும் இது மாதிரியான தவறுகள் நிகழாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *