அக்மால் ஒரு விவேகமானவரல்ல அவருக்கு அறிவுறுத்துங்கள்-ஜசெக இளைஞர் பிரிவு கோரிக்கை! .

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 17-

அக்மால் சலேவுடனான மோதலைத் தொடர்ந்து, பொறுப்பற்ற முறையில் செயல்பட வேண்டாம் என தனது இளைஞர் பிரிவுக்கு அறிவுறுத்துமாறு, ஜசெக தலைமைத்துவத்திடம் கோரிக்கை விடுத்திருக்கும் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசானை ஜசெக இளைஞர் பிரிவு கண்டித்துள்ளது.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பல முறை இனப் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு மிரட்டல் விடுத்திருப்பதை ஒப்புக் கொள்ளுமாறு முஹமட்டை அப்பிரிவின் நிர்வாக மன்றம் வலியுறுத்தியது.

"இவ்வளவு காலமாக, விவேகமற்றவராகவும் பொது சிந்தனையற்றவராகவும் இருந்து வரும் ஒரே நபர் அக்மால் மட்டுமே. முகமது உண்மையிலேயே ஆலோசனை வழங்க விரும்பினால், அவர் முதலில் அம்னோ இளைஞர் தலைவரிலிருந்து தொடங்க
வேண்டும்."அமைதிக் கொள்ளுமாறும் மடானி அரசாங்கத்தின் நிர்வாகத்தை சேதப்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறும் அவரை (அக்மால்) கண்டியுங்கள்” என்று நேற்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அப்பிரிவு கேட்டுக் கொண்டது.

ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெகவுக்கும் அம்னோவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சுமுகமாகவும் சீராகவும் இருந்து வருவதாகக் கூறிய ஜசெக இளைஞர் பிரிவு, ஆனால், அக்மால் மட்டும்தான் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதோடு சொந்தக் கட்சியை அவமானப்படுத்தியும் வருவதாகத் தெரிவித்தது.

அக்மாலுடனான அரசியல் உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கோரும் ஜசெக இளைஞர் பிரிவுகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவசரப்பட்டு செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்துமாறு ஜசெகவை முஹமட் நேற்று முன்னதாக அறிவுறுத்தி இருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *