வரம்பு மீறிய அக்மாலின் பேச்சுகள் தேமுவை திருப்பித் தாக்கும்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 19

தேசியக் கொடி விவகாரம் தொடர்பிலான அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேயின் வரம்பு மீறிய கடுமையான பேச்சுகளும், தந்திரங்களும், தேசிய முன்னணியை புதை குழியில் தள்ளிவிடக் கூடும் என்றும் பக்காத்தான் ஹராப்பானுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடும் என்றும், மசீச முன்னாள் உதவித் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

அக்மாலின் "அரசியல் நாடகம் அம்னோவுக்கு கூடுதலான மலாய்க்காரர்களின் வாக்குகள் கிடைப்பதற்கு வழிவகுக்காது என்றும் அதற்கு மாறாக, தேசிய முன்னணிக்கான சீனர் மற்றும் இந்திய வாக்காளர்களின் ஆதரவை திசை திருப்பி விடும் என்று, தி லியான் கெர் எச்சரித்துள்ளார்.

"அக்மால் விசயத்தில் அம்னோ தொடர்ந்து மௌனமாக இருந்தால் அல்லது அவருக்கு ஆதரவு அளித்து வந்தால், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் அல்லது சேதங்கள் மசீச மற்றும் மஇகாவோடு நின்று விடாது."மாறாக, இதன் மூலம் அம்னோவே தேசிய முன்னணியை அழித்து விடும்.

தேமுவும் பக்காத்தான் ஹராப்பானும் தொடர்ந்து ஒன்றாக பணியாற்றி வந்தால், பக்காத்தான் ஹராப்பனை அது பாதிக்கச் செய்துவிடும். அக்மாலின் அரசியல் நாடகத்தினால் தான் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவரின் இத்தகைய நாடகத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள ஜசெக முயன்று வருகிறது என்று லியான் கெர் குறிப்பிட்டுள்ளார்."அக்மாலின் தந்திரம் அம்னோவின் பாடப் புத்தகம் என்று வருணித்த அவர், குறிப்பாக துங்கு அப்துல் ரஹ்மான் காலகட்டத்தில் நடந்தது போலானது என்றும் தெரிவித்தார்.

ஒரு வன்பொருள் கடை உரிமையாளரை "ஆபெக்" என்று இழிவாக விவரித்திருப்பது போன்ற அக்மாலின் அண்மைய செயல்பாடுகள், மலாய் மேலாதிக்கக் கதையில் கையாண்ட விதம் போன்றது என்பதோடு, இது கடந்த கால அம்னோ தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உத்தியுமாகும் என்று, லியான் கெர் தெரிவித்தார்.

“எனினும், அதுபோன்ற உத்திகள் இப்போது அம்னோவை திருப்பித் தாக்கக் கூடும். முன்னேற்றம் அடைந்துள்ள மற்றும் தகவல் அறிந்தவர்கள் மத்தியில் இத்தகைய உத்திகள் எடுபடாது. அதுபோன்ற நாடகங்களை மதிப்பீடு செய்யும் மற்றும் மீண்டும் நினைவுகூரும் மனநிலையில் இப்போதைய வாக்காளர் இருக்கின்றனர்.

“அச்சுறுத்தும் சமூகத்தினர்போல் சீனர்களை சித்தரிப்பது அல்லது அவர்களை கைப்பாவைகளாக பயன்படுத்தும் செயல், இனியும் முன்புபோல் பயனுள்ளதாக இருக்காது என்று, முன்னாள் துணை அமைச்சருமான லியான் கெர்  தெரிவித்துள்ளார்.

அக்மாலின் வரம்பு மீறிய கடுமையான பேச்சுகளுக்கும் தந்திரங்களுக்கும் ஆதரவு அளித்து வருவதற்காக,மசீசவையும் மஇகாவையும் ஆதரித்து வரும் சீன மற்றும் இந்திய வாக்காளர்கள் அம்னோ மீது அதிருப்தி அடைந்திருக்கின்றனர் என்று. அக்மாலின் இத்தகைய வரம்பு மீறிய செயலை ஆதரிக்கும் அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி போன்ற அம்னோவினரை லியான் கெர் சுட்டிக் காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *