அக்மாலின் ராஜினாமா தேவையற்றது! - புவாட் சர்காஷி
- Shan Siva
- 16 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 16அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி, அக்மாலின் ராஜினாமா தேவையற்றது என விமர்சித்துள்ளார். டிஏபியுடன் போராடுவது முழுநேரப் பணியல்ல; அதற்காக மாநில அரசுப் பதவியை விலக வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்தார்.
மேலும், மலாக்கா பாரிசான் நேஷனல் (BN) தலைமையிலான அரசு என்பதால், அங்கு Exco பதவியை விலகுவது, பக்கத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசிலிருந்து விலகுவது போல் அரசியல் முக்கியத்துவம் பெறாது என்றும் புவாட் கூறினார்.
அம்னோ இளைஞர் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதே அரசியல் ரீதியாக அதிக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்பு, மலாக்கா மாநிலத்தின் கிராமப்புற மேம்பாடு, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை Exco பதவியை அக்மால் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். அவரது ராஜினாமா அடுத்த வாரம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



