எனது சொந்த நிலை தெரியும்! மக்கள் நினைக்கும் இடத்தில் நான் இருப்பேன்! - சனூசி
- Shan Siva
- 27 Aug, 2025
சிக், ஆக 26: கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி
முகமது நோர், பாஸ் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதா இல்லையா என்பது
குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமைக்குள்
இந்த முடிவு பாஸ் மத்திய தேர்தல் குழுவிற்கு தெரிவிக்கப்படும் என்று அவர்
கூறினார்.
ஆகஸ்ட் 29 வரை முடிவெடுக்க
கால அவகாசம் இருக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. தகுதி என்பது
போட்டியிடுவேன் என்று அர்த்தமல்ல. நான் ஒரு போதும் கட்சியில் பதவிகளைத்
துரத்தியதில்லை. இப்போது வகிக்கும் பதவி மற்றவர்களால் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது என்று
அவர் கூறினார்..
எனக்கு எனது
சொந்த நிலை தெரியும், மேலும் படிநிலையில் மேலே ஏற வேண்டிய அவசியம்
எனக்கு இல்லை. நான் பதவிகளைத் துரத்தவில்லை. நான் மிகவும் பொருத்தமானவன் என்று
மக்கள் நினைக்கும் இடத்தில் நான் இருப்பேன் என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அலோர் ஸ்டார்
பாஸ் பிரிவு அதன் 46வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் சனுசியை உதவித் தலைவர்
பதவிக்கு ஏகமனதாக பரிந்துரைத்ததாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.
கெடா
பெரிகாத்தான் நேஷனல் தலைவரான சனுசி, பரிந்துரைக்கப்பட்ட போதிலும் உதவித் தலைவர்
பதவிக்கு போட்டியிட இரண்டு முறை மறுத்துவிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



