புதிய கோயில்களைக் கட்டுங்கள்! ஆனால்....? அன்வார் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 19,

புதிய சமய வழிபாட்டுத் தலங்களை அமைக்க மடானி அரசு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார். புதிய கோயில்களைக் கட்டுவதற்கு அரசு  எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் என்றாலும் நிலப்பிரச்சனை,உரிமம் பிரச்சனை அஆகிய சட்டச்சிக்கல்களையும் கோயில் நிர்வாகம் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என பிரதமர் அன்வார் நினைவூட்டினார். இன்று உள்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்திய பின்னர் கோயில் நிலப்பிரச்சனைகளால் என்ன மாதிரியானப் பாதிப்புகளை நில உரிமையாளர்கள் மேற்கொள்கின்றனர் என்பதைப் பற்றியும் வரலாறுகளுடன் தொடர்புடைய கோயில்களை அரசு பராமரிப்பதற்கானத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அன்வார் தெரிவித்தார். 

எந்தவொரு சமயமும் மற்ற சமயத்தையும் மற்றவர்களுடைய நம்பிக்கையைக் கேலி செய்ய அனுமதிப்பத்தில்லை. அதே போல தான் சட்டவிதிகளை மீறி தான் கோயில்கள் அமைக்க வேண்டும் என்பதில்லை. முறையான விண்ணப்பங்களின் மூலமாக இந்த பிரச்சனைகளைச் சுமூகமாகத் தீர்க்கவும் முடியும் என அன்வார் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் சமய வழிபாட்டுத் தலங்களை இடிக்க எந்தவொரு தனிநபருக்கும் உரிமம் இல்லை. அரசு அதிகாரிகளும் முறையான ஆய்வுகளுக்குப் பின்னர் சம்மந்தப்பட்ட கோயில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அதற்கான தீர்வை வழங்குகிறார்கள். அப்படியானத் தீர்வின் போது எந்த தரப்பினரும் பாதிக்கப்பட கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kvnathan

நேற்று ஒரு பேச்சு.இன்று ஒரு பேச்சு. எதைத்தான் நம்பறது