KOIL HARAM என சொல்லலாம்! சர்ச்சையைக் கிளப்பிய வழக்கறிஞர்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 29,

அரசு அனுமதியின்றி தனியார் நிலத்தில் அமைக்கப்படும் கோயில்களை KOIL HARAM என குறிப்பிடுவதில் எந்தவொரு தவறும் இல்லை என மூத்த வழக்கறிஞர் Mohamed Haniff Khatri Abdulla தெரிவித்துள்ளார். முறையாகப் பதிவுச் செய்யப்படாத கோயில்களை KOIL HARAM என அடையாளப்படுத்துவது தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. வழிபாட்டுத் தலங்களைக் கேவலப்படுத்தும் பலருக்கு எதிராக HINDU TEMPLES TASK FORCE எனும் தன்னார்வ அமைப்பு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றன. இதுவரையில் 30 க்கும் மேற்பட்ட புகார்களை அளித்திருப்பதாக HINDU TEMPLES TASK FORCE தன்னார்வ அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில் மூத்த வழக்கறிஞர் Mohamed Haniff Khatri Abdulla கோயில் ஹராம் என குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாகச் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு கோயில் ஹராம் எனும் வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்ததையும் வழக்கறிஞர் Mohamed Haniff Khatri Abdulla மேற்கோள்காட்டி மலாய் வார்த்தைகளின் உண்மையானப் புரிதல் இல்லாததால் ஹராம் எனும் வார்த்தையை இழிவானது என கருதுகிறார்கள். சட்டப்படியும் முறைப்படியும் இல்லாத ஒன்றை ஹராம் என வகைப்படுத்தலாம் என வழக்கறிஞர் Mohamed Haniff Khatri Abdulla தெரிவித்துள்ளார். 

KOIL HARAM எனும் சொல் இந்திய சமூகத்தைக் கேவலப்படுத்தும் வகையில் பயன்படுத்துவதால் அச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இதற்கு முறையான தீர்வுகளை வழங்க சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஒற்றுமை துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு, பி.கே.ஆர் தீபன் சுப்ரமணியம் ஆகியோர் வலியுறுத்துவதுடன் HINDU TEMPLES TASK FORCE எனும் தன்னார்வ அமைப்பு சம்மந்தப்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று கோயில் நிர்வாகத்தினரைச் சந்தித்தும் வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *