மலேசியா கத்தார் மற்றும் பஹ்ரைனுக்கு ஆதரவு – அன்வார் இப்ராஹிம்
- Surendran Sumdraraj
- 07 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 7-
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கையாக ஈரான் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னணியில், கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகள் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மலேசியா தனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளது.
மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார். அவர், இந்த விவகாரம் குறித்து கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி மற்றும் பஹ்ரைன் நாட்டின் கிரௌன் பிரின்ஸ் மற்றும் பிரதமர் பிரின்ஸ் சல்மான் பின் ஹமத் அல் கலீபா ஆகியோருடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறினார்.
இந்த உரையாடலின் போது கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகளின் தற்போதைய நிலைமை குறித்து இருதரப்பும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையைப் பற்றியும் விவாதித்ததாகவும் அன்வார் தெரிவித்தார்.
மேலும், கத்தார் மற்றும் பஹ்ரைன் அரசுகள் அந்நாடுகளில் வாழும் மலேசிய குடிமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதில் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அவர் பாராட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



