நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்! இருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 22,

கோத்தா திங்கி சாலையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனமோட்டிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று காலை 7 மணியளவில் விபத்துக் குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு 6 மீட்பு அதிகாரிகளுடன் விரைந்து வாகனத்தில் சிக்கியிருந்த இரு வாகனமோட்டிகளையும் மீட்டதாகக் கேத்தா திங்கி மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Shahrulnizam Johari தெரிவித்தார். 

உயிரிழந்த இருவரும் 37 வயது Mohd Fakhrurazi, 47 வயது Yuliana Sahir என அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் வாகனமோட்டிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் உடல் காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கேத்தா திங்கி மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Shahrulnizam Johari தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *