டிக்டாக் தளத்தில் பரவி வரும் வீடியோ முற்றிலும் போலி-ஏகேபிஎஸ் உறுதி
- Surendran Sumdraraj
- 27 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 27-
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS) தனது தலைமை இயக்குநர் தொடர்பாக டிக்டாக் தளத்தில் பரவி வரும் வீடியோ முற்றிலும் போலியானது என உறுதிப்படுத்தியுள்ளது.
ஏகேபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், @Haily Only Official என்ற பெயரில் செயல்படும் டிக்டாக் கணக்கு, தலைமை இயக்குநர் Mohd Shuhaily Mohd Zain அவர்களுடையதல்ல என்றும், அந்த கணக்கு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாதது என்றும் தெரிவித்தது.
“வைரலாகப் பரவி வரும் வீடியோவும், @Haily Only Official என்ற சமூக ஊடகக் கணக்கும் ஏகேபிஎஸ் தலைமை இயக்குநருடன் தொடர்புடையவை அல்ல. அந்த வீடியோ டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்டு, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது,” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய போலி உள்ளடக்கங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாகத் தோன்றச் செய்து மக்களை குழப்பம் அடையச் செய்கின்றன என்றும், பொதுமக்கள் தகவல்களை பகிர்வதற்கு முன் சரிபார்க்க வேண்டும் என்றும் ஏகேபிஎஸ் அறிவுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



