RM621,000 மதிப்பிலான எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்! – KPDN PAHANG!
- Thinagaren Sanggaren
- 11 Jul, 2025
ஜூலை 11,
சட்டவிரோதமாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களை விற்பனை செய்து வந்த நிறுவனத்தின் மீது பகாங் மாநில உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீன அமைச்சு (KPDN PAHANG) மேற்கொண்ட சோதனையில் 1,105 பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை பெந்தோங்கில் உள்ள ஒரு வணிகக் கடையில் இச்சோதனை மேற்கொல்லப்பட்டதாகப் பகாங் மாநில உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீன அமைச்சு (KPDN PAHANG) இயக்குநர் Jezlily Jamaluddin தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட
நிறுவனத்தின் விற்பனை உரிமம் காலாவதியான நிலையில் அதனை புதுப்பிக்கும்படி கடந்த 1 மாதத்திற்கு
முன்னமே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் சம்மந்தப்படட் நிறுவனம் அலட்சியமாக
இருந்ததால் இச்சோதனையை மேற்கொண்டதாகப் பகாங் மாநில உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீன
அமைச்சு (KPDN PAHANG) இயக்குநர் Jezlily Jamaluddin விளக்கமளித்தார்.
நிறுவனத்தின் மீதான நடவடிக்கையில் 3 TRELER லாரிகளுடன் 1,105 பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்கள் பறிமுதல்
செய்யப்பட்டிருப்பதாகவும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் 1,105 பெட்ரோலிய
எரிவாயு (LPG) சிலிண்டர்களின் மதிப்பு RM621,000 ரிங்கிட் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் பகாங்
மாநில உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீன அமைச்சு (KPDN PAHANG) இயக்குநர் Jezlily Jamaluddin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



