ஆரம்ப & இடைநிலைப்பள்ளித் தேர்வுகளில் தமிழ்மொழியும் அடங்கும்! கல்வி அமைச்சு உறுதி!
- Thinagaren Sanggaren
- 22 Jan, 2026
ஜனவரி 22,
மலேசியக் கல்வித் திட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தால் தமிழ்மொழிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும் புதிய தேர்வுகளில் தாய்மொழிக் கல்விக்கான தேர்வுகளும் அடங்கும் என துணை கல்வி அமைச்சர் WONG KAH WOH நம்பிக்கை அளித்தார். குறிப்பாகத் தமிழ்ப்பள்ளிகளில் உள்ள தேர்வுகளில் முன்னர் போலவே தமிழ்மொழித் தேர்வைத் தேர்வு வாரியமான LEMBAGA PEPERIKSAAN நடத்தும் என WONG KAH WOH தெரிவித்தார். 2026 முதல் 2035 ஆம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கையில் இடைநிலைப்பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகளில் மலாய், ஆங்கிலம், வரலாறு, கணிதம், அறிவியல், ஆகிய 5 பாடங்களுடன் தமிழ் சீனமும் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டமாக இருக்கும் என்றும் அதற்கான தேர்வுத் தாள்களைக் கல்வி அமைச்சின் தேர்வு வாரியம் தயாரிக்கும் என்றும் WONG KAH WOH தெரிவித்தார்.
தமிழ் சீனப் பாடங்களைத் தற்காக்கவும் அதற்கான
உரிய அங்கீகாரத்தை வழங்கவும் மடானி அரசு உறுதியுடன் இருப்பதாகத் துணைக் கல்வி அமைச்சர்
WONG KAH WOH நம்பிக்கை அளித்தார். அதேவேளையில்
தங்கள் பிள்ளைகளுக்கான அடிப்படைக் கல்வியை
நிர்ணயிப்பதில் பெற்றோர்களின் உணர்வுகளையும் கல்வி அமைச்சு மதிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக
மடானி அரசின் அனைத்து வகையிலான கல்விக் கொள்கைத் திட்டங்கள் இனம் மதம் சமூகப் பாகுபாடு
இல்லாமல் அனைத்து தரப்பு சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் வெளிப்படையாகச் செயல்பட்டு
வருகிறது என WONG KAH WOH சுட்டிக்காட்டினார். றிப்பாக 2026 ஆம் ஆண்டில், நாடு முழுவதும்
உள்ள பல இனங்களைச் சேர்ந்த 5.2 மில்லியன் மாணவர்களுக்குப் பள்ளி
ஆரம்ப உதவித்தொகை வழங்குவதற்காக ரிங்கிட் 794 மில்லியன் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்
கட்டுமானப் பணி சிக்கலையும் கல்வி அமைச்சு தீர்வளித்துள்ளது. மாற்று கட்டுமானத்தைத்
தொடங்க சிறப்பு நிதியும் வழங்கப்படவுள்ளது. அதேவேளையில் GOPENG தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பிரச்சனைக்கும் தீர்வு
வழங்கப்பட்டவுள்ளது என துணைக் கல்வி அமைச்சர் WONG KAH WOH தெரிவித்தார்.
இந்த திட்டங்கள் அனைத்தும் பிரதமர் டத்தோ ஸ்ரீ
அன்வார் அவர்களால் நேரடியாகக் கல்வி அமைச்சு செயல்படுத்தவிருப்பதாகவும் WONG KAH WOH தெரிவித்தார். மடானி அரசின் கல்விக் கொள்கை என்பது
அனைத்து சமூகத்தின் கல்வி மேம்பாட்டை உறுதிச் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது
என WONG KAH WOH தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



