பள்ளிகளில் முழுமை பெறாத கட்டிடங்கள்! குத்தகையாளர்கள் மீது நடவடிகை! – கல்வி அமைச்சர் FADHLINA

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 8,

பள்ளிகளில் கட்டப்படும் கட்டிடங்கள் முழுமை பெறாமல் தாமதப்படும் குத்தகையாளர்கள் மீது கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK எச்சரிக்கை விடுத்தார். கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பல கட்டிடங்கள் குறிப்பிட்ட காலவரைக்குள் கட்டி முடிக்காமல் தாமதப்படுத்திய குத்தகையாளர்களைக் கல்வி அமைச்சு அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்களின் குத்தகைகளைக் கல்வி அமைச்சு ரத்து செய்து வழக்கு தொடரும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

கடந்த 2024 ஆம் ஆண்டும் நிறைவு பெற வேண்டிய 46 மேம்பாட்டுத் திட்டங்கள் முழுமைப் பெறாமல் இருப்பதைக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK சுட்டிக்காட்டினார். கடந்த 12 ஆவது மலேசியத் திட்டத்தில் 2040 மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் எந்தவொரு காரணமுமில்லாமல் முழுமை பெறாத பள்ளிக் கட்டிடங்களின் குத்தகையாளர்களுக்குக் கல்வி அமைச்சு நோட்டிஸ் வழங்கியிருப்பதாகவும் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார். எதிர்பாராத வானிலை, இயற்கை பேரிடர்களால் தாமதமாகிய ஒரு சில மேம்பாட்டுத் திட்டங்களையும் கல்வி அமைச்சு அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்களின் பணிகளைத் தொடர கல்வி அமைச்சு உறுதியளித்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *