பள்ளிகளின் பாதுகாப்பு நிலை தரவு அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது - கல்வி அமைச்சு
- Surendran Sumdraraj
- 10 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 10-
பள்ளிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வளாகங்களில் உண்மையான பாதுகாப்பு நிலையை மதிப்பிட, தரவு, கண்காணிப்பு, audit மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள், நடைமுறைகளின் பின்பற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சு மதிப்பீடு செய்து வருகிறது.
பள்ளி நிலையில் ஏழு முக்கிய கூறுகள் அடிப்படையில் பாதுகாப்பு செயல்திறனை மதிப்பிடுகிறது.
மேலும், பள்ளிகள் காவல்துறை மற்றும் முன்னாள் மாணவர்களுடன் வைத்துள்ள ஒத்துழைப்பின் செயல்திறனும் மதிப்பீட்டில் பார்க்கப்படுகிறது.
அதோடு, பள்ளியின் உடல் பாதுகாப்பு அம்சங்கள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சிசிடிவி முறையாக செயல்படுகிறதா என்பதும் கவனிக்கப்படுகிறது.
இந்தக் கூறுகளின் மூலம், ஒரு பள்ளியின் உண்மையான பாதுகாப்பு நிலையை முழுமையாக அறிய கல்வி அமைச்சுக்கு உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



