பள்ளிகளில் மது விற்பனையா? காவல்துறை விசாரிக்கும்! Fadhlina விளக்கம்!
- Thinagaren Sanggaren
- 13 Jul, 2025
ஜூலை 13,
பள்ளிகளில் மதுவிற்பனை தொடர்பான கூட்டங்களும் கலந்துரையாடல்களும் நிகழ்ந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் கவலைக்குரியது என்றும் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார். இது தொடர்பாகக் காவல்துறை புலன்விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் Fadhlina Sidek சுட்டிக்காட்டினார்.
கடந்த வாரம் கோலா திரங்கானுவில் உள்ள பள்ளியில் மது விற்பனைக்கான ஏலம் நடத்தப்பட்ட போது விற்பனை வணிகர்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் இடையில் கலகலப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் ஜொகூரில் உள்ள மற்றொரு பள்ளியில் மது விற்பனையாளர்களின் ஒன்றுக்கூடல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும், பள்ளி நிர்வாகமோ பள்ளியின் தொடர்புடைய இயக்கங்களும் கல்வி அமைச்சின் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek நினைவூட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



