பள்ளி நிகழ்ச்சிகளைக் கல்வி அமைச்சு ஒழுங்குபடுத்த வேண்டும்! பெரிக்காத்தான் வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஜுலை 11,

அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பள்ளி நிகழ்ச்சிகள் கல்வி அமைச்சின் வழிகாட்டலை மீறும்படியாக இருப்பதைக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK கண்காணிக்க வேண்டுமென  Indera Mahkota நாடாளுமன்ற உறுப்பினரும் பெரிக்காத்தான் கல்விக் குழு தலைவருமான Datuk Seri Saifuddin Abdullah வலியுறுத்தினார். ஒழுக்கமற்ற தரப்பினரால் மேற்கொள்ளப்படும் ஒரு சில நிகழ்ச்சிகள் பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்படுவதைப் பெரிக்காத்தான் கடுமையாக எதிர்ப்பதாகவும் முன்னாள் அமைச்சருமான Datuk Seri Saifuddin Abdullah நினைவூட்டினார்.

 

பள்ளி வளாகங்களில் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சிகளுக்குக் கல்வி அமைச்சின் ஒப்புதல்கள் வழங்கப்படுவதைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கல்வி அமைச்சு விரைந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் Datuk Seri Saifuddin Abdullah வலியுறுத்தினார். சமீபக் காலமாகப் பள்ளி வளாகங்களில் பொறுப்பற்ற சில தரப்பினர்களின் செயல்பாடுகளால் முக்கியமாக மதுபான நிறுவனங்களின் தலையீட்டால் நாட்டின் இறையாண்மையான இஸ்லாத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தி வருவதையும் Datuk Seri Saifuddin Abdullah சுட்டிக்காட்டினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *