முழுநேர விடுதி பள்ளிகள் சேர்க்கை குறித்த குற்றச்சாட்டு – கல்வி அமைச்சு விரிவான விசாரணை
- Tamil Malar (Reporter)
- 13 Jan, 2026
நிபோங் தெபால், ஜன. 13-
முழுநேர விடுதிப் பள்ளிகள் (SBP) சேர்க்கை விண்ணப்ப அமைப்பில் ஏற்பட்டதாக கூறப்படும் முரண்பாடுகள் குறித்து மலேசியக் கல்வி அமைச்சகம் (KPM) விரிவான விசாரணை நடத்த உள்ளதாக கல்வி அமைச்சர் படீலினா சிடேக் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு, மாணவர்களின் தகுதி நிலை குறித்து பெற்றோர், மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்டமாக முழுமையான விசாரணை மேற்கொள்ள அமைச்சு சிறிது அவகாசம் கோருவதாக அவர் கூறினார். குற்றச்சாட்டுகள், அமைப்பு தற்காலிக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நாங்கள் (KPM) இதைச் சரிபார்ப்போம். சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெயர்களைப் பெற்றுக் கொண்டு, அந்த விண்ணப்ப அமைப்பு உண்மையில் பிரச்சினையுடன் செயல்பட்டதா என்பதை உறுதி செய்வோம்,” என அவர் விளக்கினார்.
இன்று இங்கு நடைபெற்ற 2026 கல்வியாண்டுக்கான பள்ளி தொடக்க உதவி (BAP) காசோலை வழங்கும் நிகழ்ச்சியில், செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



