PTPTN கடனைச் செலுத்தாமல் தவிர்ப்பது குற்றம்! – உயர்கல்வி அமைச்சர்!
- Thinagaren Sanggaren
- 28 Oct, 2025
அக்தோபர் 28,
உயர்கல்வி மாணவர்களுக்கான PTPTN கல்விக் கடனைச் செலுத்தாமல் தாமதிப்பது ஒரு குற்றம் என்பதை உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Zambry Abd Kadir நினைவூட்டினார். பட்டம் பெற்ற மாணவர்கள் PTPTN கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதன் கால அட்டவணையை மாற்றிக் கொள்ளவும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதாகவும் உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Zambry Abd Kadir சுட்டிக்காட்டினார்.
நிதி நெருக்கடியால் தவிக்கும் ஏழை மாணவர்கள் PTPTN கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் இருப்பதை Datuk Seri Zambry Abd Kadir சுட்டிக்காட்டினார். அவர்களுக்கான PTPTN கல்விக் கடன் தள்ளுபடி செய்ய உயர்கல்வி அமைச்சு போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு முன்னதாக PTPTN கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தாமதப்படுத்தும் மாணவர்கள் அவர்களின் PTPTN கல்விக் கடன் செலுத்துவதற்கானக் கால அட்டவணையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் அதற்கான விண்ணப்பங்களைப் பெற்றதும் வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் PTPTN கல்விக் கடன் தள்ளுபடி செய்வதற்கான முன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Zambry Abd Kadir விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



