கோலாலங்காட் செண்ட்ரல் லயன்ஸ் கிளப் வசதி குறைந்தோருக்கு மனித் நேய உதவிகள் வழங்கியது
- Tamil Malar (Reporter)
- 10 Nov, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
பந்திங், நவ. 11-
கோலாலம்பூர், செண்ட்ரல் லயன்ஸ் கிளப் பந்திங் வட்டார ரீதியில்
வசதி குறைந்த இந்திய குடும்ப உறுப்பினர்களுக்கு மனித நேய அடிப்படையில் ஏழை மாணவர்களுக்கும்
பேறு குறைந்தவர்களுக்கும் தேவையான உதவிநிதி வழங்கப்பட்டு வருவதாக இயக்கத்தின் தலைவர்
இராஜேந்திரன் நடேசன் தெரிவித்தார்.
உயர்கல்வியை மேற்கொள்ள ஆர்வமிருந்தும் குடும்ப வறுமை காரணமாக
கல்வியைத் தொடர முடியாத மாணவர்களை அடையாளம் கண்டு, உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர்
மேலும் கூறினார். பந்திங் வட்டாரத்தில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் நடைபெற்ற தீபாவளி
திறந்த இல்ல உபசரிப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
லயன்ஸ் கிளப்பின் மனித நேய சேவையை நாட விரும்புவோர்,அதன்
பொருளாளர் பழனிக்குமாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அணிச்சல்
வெட்டி, தலைவரால் தொடக்கிவைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் உட்பட
150க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



