தோட்டத்தில் குடியிருந்த 13 சட்டவிரோத வெளிநாட்டினர்கள் கைது!
- Thinagaren Sanggaren
- 25 Jan, 2026
ஜனவரி 25,
தனியார் தோட்டத்தில் சட்டவிரோதமாகத் தங்கி வேலை செய்து வந்த 13 வெளிநாட்டினர்களைக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. குவாந்தானில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில் பலகையில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்கள் தங்கியிருப்பதாக உள்ளூர் தோட்டத் தொழிலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்றிரவு பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை இச்சோதனையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இத்தோட்டத்தில் பணியமர்த்தப்பட்டதிலிருந்து உள்ளூர்வாசிகள் வேலையில்லாமல் அவதியுற்றதால் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகப் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
தனியார் தோட்டத்துக்குள் சுகாதாரமற்ற நிலையில் இருந்த பலகை வீடுகளில் 53 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் 40 வெளிநாட்டிர்கள் மட்டுமே தொழிலாளர் உரிமம் கொண்டிருந்ததாகவும் 13 வெளிநாட்டினர்கள் எந்தவோர் ஆவணமும் கொண்டிருக்காததால் அவர்களைக் கைது செய்திருப்பதாகவும் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 21 முதல் 40 வயதுக்குற்பட்ட இந்தோனேசியர்கள் என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மேலதிக விசாரணைக்காக 13 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



