சுடுகாட்டிலும் அரசியல் செய்யும் அம்னோ! DAP அமைச்சர் HANNAH YEOH சாடல்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 9,

 சிலாங்கூரில் இஸ்லாமியர்களுக்கான மயானம் அமைக்க நிலம் வழங்கப்படுவதில்லை என அம்னோ கட்சியினர் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூட்டரசு வளாக அமைச்சர் HANNAH YEOH சாடினார். குறிப்பாக SEMINYIH - வில் இசுலாமிய சமூகத்திற்கான மயானம் விரிவாக்கம் செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து  அம்னோ கட்சியினர் மத விவகாரங்களில் MADANI அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்துள்ளதை HANNAH YEOH சுட்டிக்காட்டினார். 

ஒரு சமூகத்திற்காக வழங்கப்பட்டிருக்கும் மயானத்தின் நிலம் கட்டாயம் விரிவாக்கம் செய்யப்படும் முன்னர் அதன் சுற்று வட்டாரத்தையும் அரசு கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் உள்ள மயானத்தை விரிவுபடுத்தினால் அது போக்குவரத்துக்கும் மேம்பாட்டுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அந்த விரிவாக்கத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என கூட்டரசு வளாக அமைச்சர் HANNAH YEOH விளக்கமளித்தார். அம்னோ தொடர்ச்சியாக தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் இப்போது சுடுகாட்டிலும் அரசியல் செய்கிறது என கூட்டரசு வளாக அமைச்சர் HANNAH YEOH கடுமையாக சாடினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *