பினாங்கு கோயில்கள் குறித்து அவதூறு பரப்பாதீர்! செனட்டர் லிங்கேஸ்வரன் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 24,

மேலவைக் உறுப்பினரான செனட்டர் லிங்கேஸ்வரன்   இன மற்றும் மத நல்லிணக்கத்தைச் சார்ந்த பிரச்சினைகளை அணுகும் போது சட்டத்தின் ஆட்சி என்ற கொள்கையே முதன்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தேசிய ஒற்றுமையைப் பற்றிய மாமன்னரின் உரையை மேற்கோள் காட்டிய செனட்டர் லிங்கேஸ்வரன் , கோவில் இடிப்பு விவகாரம் மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தியிருப்பதாகவும் ஒரு சிலரான Tamim Dahri, Cikgu Chandra அடங்கிய ஒரு கூட்டம் கோயில்களைக் குறித்து அவதூறுகளையும் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலானக் கருத்துகளைப் பரப்புவதையும் நிறுத்த அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தினார். இப்போது புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு கோயில் குறித்து இந்த கும்பல் தேவையற்ற சர்ச்சைகளைப் பரப்பி வருகிறது. அனைத்து சமூகத்தினரும் மத நல்லிணக்கத்துடன் வாழும் பினாங்கு மாநிலத்தில் இந்த கும்பல் அவர்களுடைய மத வெறி பிரச்சாரத்தைக் கொண்டு வந்தால் அவர்களுக்குத் தகுந்த பாடத்தைப் பினாங்கு அரசு புகுட்டும் என்றும், பினாங்கு மாநிலத்தைச் சாராதவர்கள் மாநில விவகாரங்களில் தலையிட கூடாது என செனட்டர் லிங்கேஸ்வரன்  நாடாளுமன்ற மக்களவையில் எச்சரித்தார்.

பினாங்கில் அமைந்திருக்கும் கோயில்களுக்கு ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அமைதியான மற்றும் சட்டபூர்வமான முறையில் தீர்க்கப்படும் என்றும், அதற்காக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆர்.எஸ்.என் இராயர், பினாங்கு ஆட்சி குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குமரன் கிருஷ்ணன் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குமரேசன் ஆகியோர் கோயில்களுக்கு அதரவாகவும் சட்டத்தைப் பின்பற்றியும் ஒன்றாக இருப்போம் என செனட்டர் லிங்கேஸ்வரன்  வலியுறுத்தினார்,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *