சிலாங்கூரில் 686 கோயில்கள் சட்டவிரோதமானது! 1 கோயிலை உடைக்க நாடு முழுவதிலிருந்து 14 அமைப்புகள்!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 26,

ரவாங்கில் அமைந்திருக்கும் கோயிலை இடிக்க நகராண்மைக் கழகம் அனுமதியளித்த நிலையில் நேற்று மாலை பெர்லிஸ், பினாங்கு, சபா, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களிலிருந்து பலரும் திரண்டதாக GARAH எனும் கோயில்களுக்கு எதிரானக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் FIRDAUS WONG தெரிவித்துள்ளார். சிலாங்கூரில் 687 கோயில்கள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு கோயில் இப்போது உடைக்கப்பட்டுள்ளது என சமய போதகருமான FIRDAUS WONG தெரிவித்தார். குறிப்பாக இந்த ரவாங் கோயில் உடைப்பில் இந்து மத போதகரும் துறவியுமான சாய் எனும் ஒருவரும் எங்களுடன் இணைந்திருக்கிறார் என இஸ்லாமிய மத போதகரான FIRDAUS WONG தெரிவித்தார். 


இந்து துறவியான சாய், இந்தியாவிற்குச் சென்று இந்து மதத்தைப் பற்றி படித்திருக்கிறார். அவருக்கு எங்களுடைய செயல்பாடுகளில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என FIRDAUS WONG தெரிவித்தார். அரசியல்வாதிகளும் தனிநபர்களும் தங்களின் ஆதாயத்திற்காக எங்களுடைய செயல்பாடுகளைத் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என FIRDAUS WONG தெரிவித்தார். நேற்று ரவாங்கில் உடைக்கப்பட்ட கோயில் சிலாங்கூரின் முதல் கோயில் என்றும் இன்னும் 686 கோயில்கள் மிச்சம் இருப்பதாகவும், இந்து துறவியான சாய், CIKGU CHANDRA ஆகிய இருவரும் எங்களுடன் KOIL HARAM-க்கு எதிராகப் பயணிப்பார்கள் என FIRDAUS WONG தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *