நிலமற்ற கோயில்களை அடையாளம் கண்டுள்ள இந்து அறப்பணி வாரியம்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 22,

பினாங்கில் உள்ள இந்து கோயில்களை மாநில அரசு பாதுகாக்கும் நிலையில் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் நிலம் இல்லாத இந்து கோயில்களை அடையாளம் கண்டு மாநில அரசுடன் கலந்துரையாடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் செனட்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார். சொந்தமாக நிலம் இல்லாத கோயில்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அடுத்த கட்ட மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ள பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் செனட்டர் லிங்கேஸ்வரன் உறுதியளித்தார். 

அரசு நிலத்திலோ, தனியார் நிலத்திலோ அமைந்திருக்கும் கோயில்களை அகற்றும் தேவைகள் ஏற்பட்டால் முறையான மாற்று நிலம் வழங்குவதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாக பினாங்கு மாநில முதலமைச்சர் CHOW KHON YIEW குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்த முன்னெடுப்பை தொடங்கி உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *