கோயில்களுக்கு மாற்று நிலம் வழங்குவதே தீர்வு! – பினாங்கு முதலமைச்சர் உறுதி!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 12,

கோயில் விவகாரங்களில் தேவையற்ற சர்ச்சைகள் வேண்டாம் என பினாங்கு மாநில முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார். கோயில் விவகாரத்தில் கோயிலை இடிக்கும் மாதிரியான எந்தவொரு நடவடிக்கையையும் பினாங்கு அரசு அனுமதிக்காது என Chow Kon Yeow உறுதியளித்தார். ஒரு கோயில் அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் அந்த கோயிலின் வரலாறு, பழமையைக் கருத்தில் கொண்டு அந்த கோயிலுக்கான நிலத்தை வழங்குவதே சிறந்து சிறந்த தீர்வாக அமையும். ஆனால் அந்த கோயில் இருக்கும் நிலத்திலேயே அந்த கோயில் அமைக்கப்படுமா அல்லது புதிய நிலம் வழங்கப்படுமா என கேட்டால் அந்த கோயில் இருக்கும் நிலத்தின் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என Chow Kon Yeow தெரிவித்தார். 

பினாங்கில் வழிபாட்டுத் தலங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நிலங்கள் மாநில அரசாங்கத்திடம் கைவசம் உள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட நிலங்கள் கோயில்களை அமைக்க மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பினாங்கு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த நிலங்கள் உள்ளது என்பதால் வரலாற்றுப்பூர்வமான கோயில்களுக்கு அரசு நிலம் வழங்குவதில், குறிப்பாகப் பினாங்கு அரசு நிலம் வழங்குவதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என பினாங்கு மாநில முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *