கோயில் விவகாரத்தைச் சர்ச்சையாக்காதீர்! 4000 சதுர அடியில் புதிய நிலம்! - Datuk Seri Dr Zaliha Mustafa

top-news

மார்ச் 25,

தலைநகரில் அமைந்துள்ள Kuil Dewi Sri Pathrakaliamman ஆலய விவகாரத்தில் இன மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் சர்ச்சையானக் கருத்துகளைப் பகிர வேண்டாம் என கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa அனைத்து தரப்பினர்களுக்கும் வலியுறுத்தினார். Kuil Dewi Sri Pathrakaliamman ஆலய நிர்வாகத்தினரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப முறையானப் பேச்சுவார்த்தையைச் சமூகத் தலைவர்களுடனும் ஆலய நிர்வாகத்துடனும் இன்று நடத்தியதாகவும் கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.

கோலாலம்பூர் நகராண்மைக் கழக மேயரும் ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு கழகத் துணை அமைச்சர் ரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார், கோயில் தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் துரத்தில் 4000 சதுர அடி பரப்பளவில் கோயிலுக்கான இடம் வழங்கப்பட்டிருப்பதாகவும் முறையானப் பேச்சுவார்த்தையாலும் தகுதியானத் தலைவர்களால் இந்த சுமூகமான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.

Menteri Wilayah Persekutuan, Datuk Seri Dr Zaliha Mustafa, menggesa semua pihak agar tidak mencetuskan ketegangan mengenai isu kuil Dewi Sri Pathrakaliamman. Kerajaan telah memperuntukkan tapak baharu seluas 4,000 kaki persegi bagi pemindahan kuil tersebut selepas rundingan bersama pihak berkepentingan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *